தென்றலே தூது போ
![](https://eluthu.com/images/loading.gif)
கள்வா
என் இதயத்திருடா
வருகிறேன் என
கையசைத்து மறைந்துவிட்டாய்
என்னுள் உறைந்துவிட்டாய்...
என்னை ஏய்த்துவிட்டு
இதயம் பெயர்த்துவிட்டு
இனிய முத்தம்
முடிவாய் தந்து
எங்கே தான் சென்றாயோ...
மணம் மிகுந்த தென்றலே
தூது போ..!
என் காதலன் இடம்
அறிந்து தூது போ...!
அவன் நினைவுகளை
தின்றே நான் மெலிகிறேன்..
அவன் என்னை சேராவிட்டால்
என் உடல் நிலமடையும்...
தூது போ...!
என் கண்ணீரும்
வற்றிவிட எனக்காக
அழுகின்றது மேகம்...
விரைவில் வந்தவன்
விழிகளை காட்டச்சொல்...
தென்றலே...
இல்லையேல் என் விழிமூடிடும்
தூது போ...!