கவிஞன் நுழைந்தான் கணினியுடன்
சாரல் தூவிய திசையினில்
பூக்கள் பூத்துச் சிரித்தன
பூக்கள் பூத்துக் குலுங்கிய திசையினில்
தோட்டங்கள் விரிந்தன
தோட்டங்கள் விரிந்த திசையினில்
தென்றல் நடந்து வந்தது
தென்றல் நடந்த பாதை பற்றி
கவிஞன் நுழைந்தான் கணினியுடன் !
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு !
இது இயற்கைக்கு எழுதப்பட்ட கவிதை
காதல் விரும்பிகள் "கவிஞன் நுழைந்தான்
கனவுக் கன்னியுடன் " என்று கடைசி வரியை மாற்றிப்
படித்துக் கொள்ளலாம் .
IT IS LEFT TO YOUR CHOICE