வெண்ணிலா
நிலவே! ஏன்
இத்தனை கலங்கங்கள்
உன் மேனியில்...
என் தங்கை
கிருக்கிய ஓவியங்களோ
அவை...
என் தந்தை
கொட்டிய குழம்பி
துளிகளோ
அவை...
என் அன்னை
சிந்திய கோலப்பொடிகளோ
அவை...
காதல் முத்தத்தில்
சிவந்த கன்னங்களோ
அவை...
கன்னிப்பெண் முகத்திலும்
பருக்கள் இருக்கத்தானே
செய்கிறது....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
