வயல் வெளி நெல் மனி காதல்

உன்னால் வளர்ந்து உன்னை வளர்த்தேன் என் நெல்மனியே
உல்லாச காற்றில் உரசி உரசி என் மீது தொங்கினியே
உன்னோடு சேர்த்து பச்சை மறைத்து பொன்னாக்கினியே
உட்ட பயனை வெட்டும் உழவனை உண்டாக்கினியே

எனை வெட்டி வெளுத்து வெந்து பிரிந்துபோனியே
உடை இழந்து உயிர் அறுந்து போனியே
உன்னால் நெளிந்தேன் உழுத உயிர்க்கு
உணவாய் போனேன் பொன் மனியே

உயிர் அற்று இருவரும் உடலால் உமிழ்ந்து உடைந்து உருகி
ஒதுங்கினோம்

நீ மலமாய்
நா மணமாய்

உழவன் பிடித்த சாண பிள்ளையார் மணமாய்
காதலை பிரித்து கொண்டதால் நீ கழிவு
காதலை ஏற்று கொண்டதால் நா கடவுள்

எழுதியவர் : கிருஷ்ணா (5-Nov-15, 1:47 pm)
பார்வை : 694

மேலே