லைசன்சை எடு

டிராபிக் இன்ஸ்பெக்டர் : நிறுத்து நிறுத்து. ஏன் இவ்வளவு வேகத்தில் வந்தாய் ? லைசன்சை எடு

பைக் ஓட்டுபவர் : சார் என் பிரண்டுக்கு ஆக்சிடெண்ட் ஆகி ஆஸ்பத்திரியில் இருப்பதாக தகவல் வந்தது. அந்த அவசரத்தில் பர்ஸ் எடுத்து வரவில்லை. அதில்தான் லைசன்ஸ் இருக்கிறது.

அதை எடுத்துவராமல் வந்தது தப்புதான், மன்னிச்சிடுங்க. என் நண்பனை பார்த்து விட்டு வந்தபின் எங்கே வந்து லைசன்சை காண்பிக்கனுமோ அங்கே வந்து காண்பிக்கிறேன். இப்போ தயவு செய்து போக விடுங்க சார்

அதெல்லாம் முடியாது. கேஸ் எழுதணும். அப்படி ஓரமா போய் நில்லு. வண்டி சாவியை எடு .

அங்கே ஒரு போலிஸ்காரர் வருகிறார்: இந்தாப்பா தம்பி ! கேஸ் போட்டா கோர்ட்டுக்கு அலையணும். தவிர செலவு 1500 வரை ஆகும். பேசாம 1000 ரூபா கொடுத்திட்டு போ

நான் பர்ஸ் எடுத்து வரலீங்க. பாக்கெட்டில் அவ்வளவு பணம் இல்லீங்க. 500 ரூபா தான் இருக்கும்
சரி கொடு. நான் அவரிடம் பேசி பார்க்கிறேன்

இன்ஸ்பெக்டரிடம் பேசிவிட்டு வந்தபின் போலிஸ்காரர் சொல்கிறார்:

தம்பி உன் நல்லகாலம். உன்னை போகச் சொல்லிட்டார். அப்படியே நம்மளையும் கொஞ்சம் கவனிச்சிட்டு போ .

அவர் 50 ரூபா வாங்கிக் கொள்கிறார். பைக்கில் வந்தவர் பறந்து விடுகிறார்.

சிறிது நேரம் ஆன பின்பு:
கான்ஸ்டபுள் இன்ஸ்பெக்டரிடம்
சார் உங்களுக்கு கண்டரோல் ரூமிலிருந்து போன் வந்திருக்கு .

ஜீப்பில் உள்ள போனில் வந்த செய்தி: சார் உங்க மனைவி ஸ்கூட்டரில் வரும்போது ஆக்ஸிடெண்ட் ஆகி ஆஸ்பத்திரியில் இருக்காங்கலாம்.

உடனே இன்ஸ்பெக்டர் ஜீப்பில் பறக்கிறார் .
ஆஸ்பத்திரியில் டாக்டர் சொல்கிறார் :

சார் உங்க மனைவி ஹெல்மெட் போடாம வேகமா வந்திருப்பாங்க போல, தலையில் பலமாக அடிபட்டு உள்ளது. உடனடியாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும். ஒரு லட்சம் ஆகும் . போய் பணத்தை கவுண்டரில் கட்டுங்க .

இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியுடன் வீட்டிற்கு சென்று பீரோவில் பணம் எடுத்துக் கொள்கிறார்.

நடந்தது எதுவும் தெரியாமல் அவருடைய பையன் உரக்க தமிழ் பாடம் படித்துக் கொண்டு இருக்கிறான் :::

எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரை தெய்வம் வாட்டும்.

எழுதியவர் : செல்வமணி (5-Nov-15, 6:34 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 105

மேலே