காதல் குறுங்கவிதை தொடர் -12 -முஹம்மத் ஸர்பான்
உன் புன்னகை ஜப்பானின் ஹைக்கூ
என் ஏக்கம் சஹாரா பாலை
கண்களால் நீ பார்த்தால்
என் நிலத்திலும் பால் மழை பொழியும்.
உன் கூந்தல் நயாகரா
அருகில் வளர்ந்த பூக்காடு நான்
என் இதயமலரில் காதலெனும்
தண்ணீர் தெளிப்பது எப்பொழுது.....