என் கணக்குப் பதிவியல் ஆசிரியரின் கவிதை
இன்று எனது கணக்குப் பதிவியல் ஆசிரியர் திரு. சுரேஷ் கோபி அவர்கட்குப் பிறந்தநாள். அவருக்கு எங்கள் பள்ளி பதினோராம் வகுப்பு மாணவர்கள் வாழ்த்து தெரிவித்ததற்கு அவர் எழுதிய பதில்கள் கவிதையாய்...
காலமென்னும் சூழலில்
கணக்கில் அடங்காதக்
காலமெனும் வயதைக்
கடந்து பிறப்பிலிருந்து
இறப்பை நோக்கிப் பயணிக்கும் எனக்கு
நாளைய நாள் தான் வருங்காலம் என
இன்றைய நாளை
இனிப்பாக்கி
இன்முகத்துடன்
இனிப்பாக பிறந்தநாள் வாழ்த்து கூறிய
எனது மாணவச் செல்வங்களே !
காணும் காட்சியெல்லாம்
மாட்சியாக மாற்றும்
வினை தீர்க்கும் வித்தகரே !
விண்ணுலகும், மண்ணுலகும்
வியந்தான உன் வரவால் !!
வினைகளைத் தீர்ப்பை
உன் செயலால் !!
வானம் பொழிவதும் உனக்காக
வயலும் விளைவது உனக்காக
காற்று வீசுவதும் உனக்காக
கடலில் அலையடிப்பதும் உனக்காக !!
உனக்காக ! எல்லாம் உனக்காக !
எதற்காக காத்திருக்கிறாய் ?
நேரத்திற்காக ?
நேரம் காத்திருக்கிறது உனக்காக !
நீயும் மாற்றுவாய்
உன் நேரத்தைப் பொன்னாக !!
எதிர்வரும் காலம் பொன்னாகக்
காத்திருக்கிறது உனக்காக !!
சாதனைகள் பல செய்வாய் !!
என்று நம்பிக்கையுடன்
நானும் காத்திருக்கிறேன் !
நீ சாதிப்பாய் ! சாதிப்பாய் !!
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
நீ சாதிக்கும் வரை !!
அன்பும் வாழ்த்துக்களும் !!