பாச போராட்டம்
அம்மா தீபாவளிக்கு உனக்கு அழகான பட்டிருக்கு
பாசமகள் எடுத்திருக்கா
பாத்து நீ பூரித்திடம்மா
பாச மக நான் உனக்கு காரைகுடி பட்டெடுத்தேன்
நீ காஞ்சிபுரம் பட்டெடுத்தாய்
எல்லாமே என் தங்கத்துக்கு
ஐயோ அம்மா அலமாரி நிறைஞ்சிடுச்சே
ஏன் இந்த துணிகள் எல்லாம்
அலமாரி நிறைஞ்சால் எனன
ஆசை மகள் கட்டதானே
அம்மா மனசுக்குள் கதறுகிறேன்
உன் அளபறியா பாசம் எண்ணி
நான் பெற்வரை நானறியேன்
உன் மகளும் நானுமில்லை
கேடுகெட்ட போதையாலே
கற்பிழந்து களங்கமாகி
கற்பனையே செய்திடாத தற்க்கொலை
பன்னிட்டாளே என் அன்பு தோழி
என்னை உன்னை பாத்துக்க சொல்லிவிட்டு
உன் மனம் நோக கூடாதென்று
அணிந்துவிட்டேன் முகமூடியை
முகமாற்று அறுவையிலே
மன்னித்து அருளிடம்மா
பாசமுள்ள தாயவளே
அம்மா நான் மனசுக்குள்ளும்
முகமூடிகள் அணிந்திருக்கேன்
பாசமுள்ள என் மகளே
உண்மை மகள் விழிமூடும் நேரம் முன்னே
மடலாகி சொல்லிவிட்டாள் முடிவிலே
போறேனென்று.உன்னையும்
சொல்லிவிட்டாள் யாருமில்லா அனாதைனு
உன் அளப்பறியா திறமைகண்டு
கலங்கிவிட்டேன் என் மகளே.
என் பாசமகளை சீரழிச்ச கயவர்களை
சட்டம் ஏதும் செய்யாதென்று
முகத்தையும் மாற்றிக்கொண்டு
பழிவாங்கி விட்டாயடி கத்தியின்றி ரத்தமின்றி
என் மகள் மோகினிவேடமிட்டு
ஒருத்தன் பித்துபிடிக்கவைச்சிவிட்டு
இன்னொருத்தன் தற்க்கொலை பன்னவைச்சி
உறவுகளே உதவா போது பாசம் தேடி அலைஞ்ச நீ தான் என் உண்மையான
மகளுந்தானே
என் உயிரோட உயிரும் நீயே