உதை
ஒரு குறுங்கதை .
ஒரு மன்னன் தன்னுடைய தளபதி,அமைச்சர் இருவரிடமும் ஒரு கேள்வி கேட்டார்...
என் மார்பில் உதைப்பவனை என்ன செய்ய வேண்டும் என்று ,
தளபதி சொன்னார்...
தங்கள் மார்பை உதைத்தவனை சும்மா விடுவதா...மன்னா ஆணையிடுங்கள் உதைத்த அந்த கால்களை வெட்டி வீழ்த்தி விடுகிறேன்...என்று
மன்னர் சிரித்துக்கொண்டே அமைச்சரை நோக்கி இதே கேள்வியை கேட்டார்.
மன்னா...அந்தக்கால்களுக்கு தங்கத்தில் சிலம்பு செய்து போட்டு கொஞ்சி அழகு பார்க்க வேண்டும்....வீரம் செறிந்த உங்கள் நெஞ்சில் உதைக்கும் குழந்தை நிச்சயம் உங்களின் பேரன் அன்றி வேறு யாராக இருக்க முடியும்?
மன்னர் அமைச்சரை உச்சி முகர்ந்தார்.