இனிமே பட்டாசைத் தொடமாட்டேன்

டாக்டர் ஒவ்வொரு வருசமும் நீங்க பத்தாயிரம் ரூபாய்க்கு எங் கடையில பட்டாசு வாங்குவீங்க. தீபாவளிக்கு இன்னும் ரண்டு நாளுத்தான் இருக்குது. ஏ நீங்க எங் கடையக் கடந்து போறபோதுகூட கடப்பக்கம் பாக்காம வேகமாப் போறீங்க?

என்னோட ரண்டு பிள்ளைங்களுந்தாய்யா காரணம்.

ஏ அவுங்க என்ன பண்ணினாங்க?

போன வருசம் தீபாவளி முடிஞ்சதும் இனிமே பட்டாசு வாங்கக் கூடாது, வெடிக்கக் கூடாதுன்னு என்னோட 5 வயசுப் பையனும் 7 வயசுப் பொண்ணும் எங்கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்கய்யா.

அப்பிடி என்ன சொன்னாங்க?

அவுங்களோட் டீச்சருங்க "பட்டாசு வெடிக்கறது இயற்கைக்கம் உயிரினங்களுக்கும் கேடு... பட்டாசுப் பொக சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும். பட்டாசு வெடிச்சுத்தம் நோயாளிங்க, வீட்டு விலங்குங்க பறவைங்களுக்கெல்லாம் அதிர்ச்சியத் தரும். இதய நோயாளிங்க அந்த அதிர்ச்சிலயே மாரடைப்பு வந்து சாக நேரிடலாம்"னு சொனனாங்களாம்.

அதைச் சொல்லிட்டு "ஏப்பா நீங்க ஒரு டாக்டரா இருந்துட்டு நீங்களே பட்டாசு நெறைய வாங்கி வந்து நீங்க வெடிக்கறதோட இல்லாம் எங்களுக்கும் பட்டாசு வெடிக்கக் கத்துக் குடுக்கறீங்களே அது நியாயமா.

பட்டாசுத் திரில தீயை வச்சிட்டு ஒடி வர்றீங்க. எங்களையும் ஓடிவரச் சொல்லறீங்க. ஏம்ப்பா"ன்னு கேட்டாஙக.

"பட்டாசு வெடிக்கற போது நாம பக்கத்தல இருந்தா ஆபத்துன்னு நான் உங்களுக்குச் சொல்லிக் குடுத்தத மறந்திட்டீங்களா"ன்னு அவுங்களக் கேட்டேன்..

அதுக்கு அவுங்க " ஆபத்துன்னு தெரிஞ்சும் அத வெடிக்கறமே அது நல்லதா. அப்பா இனிமே பட்டாசு வெடிக்கமாட்டேன். உங்களையும் வெடிக்கச் சொல்லமாட்டேன்னு நீங்க எங்க ரண்டு பேருக்கும் சத்தியம் பண்ணிக் குடுத்தத் தான் சாப்பிடுவோம். இல்லன்னா இனிமே சாப்படமாட்டோம்"ன்னு அடம் பிடிச்சாங்க.

எங் கொழந்தைங்க டாக்டரான என்னத் திருத்தற அளவுக்கு ஆகிப் போச்சேன்னு வெக்கப்பட்டு அவுங்க புத்திசாலித் தனத்தையும் நல்ல எண்ணத்தையும் பாராட்டி அவுங்களுக்கு ஒடனே சாமி படத்துக்கு முன்னாடி நின்னு
சத்தியம் பண்ணிக்குடுத்தன்ய்யா

எழுதியவர் : மலர் (8-Nov-15, 8:54 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 134

மேலே