தித்திக்கும் தீபாவளி

தித்திக்கும் தீபாவளி
எத்திக்கும் தீபங்கள் ஒளிர
மத்தாப்பாய் மனமினிக்க
புத்தாடை பொழிவினில் திளைக்க

இல்லத்தின் தீபஒளி உம்
உள்ளத்தில் இருள் நீக்கட்டும்
வைத்திடும் பட்டாசு ஒலி
தைத்திடும் மன பயம் நீங்கட்டும்

தீபங்கள் ஏற்றுங்கள்
தீமைகள் அகற்றுவிடும்
தித்திக்கும் தீபாவளி தினம்
எத்திக்கும் இன்பம் ஒளிரட்டும்

பாவங்கள் போக்கிடும்
பாசபந்தங்கள் கூட்டிடுங்கள்
கோபங்கள் நீக்கிவிட்டு
குடும்ப ஒற்றுமையும் ஓங்கட்டும்

மீண்ட சீதையோடு வந்த
ராமரோம்பல் என்றோம்
மாண்ட அசுரன் முடிவினில்
வேண்ட மனதேங்கள் என்றோம்

ஈசனின் பாதி என்று
சக்தி இணை நாள் என்றோம்
நாதவேள்வியில் இருளும்
நீங்கிட்ட திருநாளாய் விளைந்திட்ட
தீபாவளி திருநாளயிற்று...

மனசெல்லாம் மத்தாப்பாய்
மகிழ்வினில் மனம் பட்டாசாய்
இனிப்போடும் களிப்போடும்
இனம்சேர்ந்து கொண்டாடுவோம்

இல்லத்தில் அகலொளிர
இன்பத்தில் மனம் ஒளிரட்டும்
உள்ளத்தில் இருள் ஒழிந்து
எண்ணத்தில் அருள் விழிக்க
வண்ணமாய் வாழ்வு செழிக்கட்டும்....

அரக்கனை வதம் செய்து
அசுரனின் குணம் கொய்த
கிருடிணன் பதம் வணங்கி
மன இருட்டினை போக்கிடுவோம்..

இன்றோடு துன்பங்கள் நீங்கி
என்றும் இன்பங்கள் மலரும்
தீபஒளியாக அமையட்டும் ....

சிதறும் பட்டாசுஒலி வாழ்வின்
சிரிப்பொலியாக மாறட்டும்
மிளிரும் மத்தாப்பு ஒளியும்
ஒளிரும் வாழ்வாய் இனிக்கட்டும்

தித்திக்கும் தீபாவளி...

தேனாய் இனிக்கும் இனிய
நட்புகள் நீங்கள் என்றென்றும்
வானாய் உயர்ந்து புகழுடன்
வாழ்வாய் என வாழ்த்துகிறேன்....

இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள்

பிரியமுடன்
அசுபா

எழுதியவர் : அசுபா (10-Nov-15, 9:12 am)
பார்வை : 142

மேலே