கற்பனையாலானவள் அவள்
உலகிலுள்ள உறவுகளின்
ஒட்டுமொத்த உருவாய் அவள்
சில மணி துளிகள் சாய்ந்து கொள்கிறென்
அவள் தோள்களில்
எனது மனதோடு உறவாடிடும்
கற்பனையாலான நேசமானவள்
மட்காத துயரங்களையும் பகிர துடிக்கிறேன்
அவளோடு மட்டும்
எனது டைரியின் முகப்பு பக்கத்தில்
கோணல் மானலான ஓவியமாய் வசித்திருந்தாள்
என்னை பிரசிவித்த கணமே மறிததுப்போன அவள்