போரும் சமாதானமும்

கயல் எழுதிய விழிகள்
தேநீர் புயலாகி வருவதேனோ
கோப்பையை டக்கென்று டீப்பாயில் வைத்துவிட்டு
கோபத்துடன் போவதேனோ
புன்னகை மறந்து செல்வதேனோ
தேநீருக்குமுன் இதழில்
தேன்விருந்து தர மறந்த தேனோ
காஞ்சிப் பட்டுக்கு வாக்களித்து
காட்டன் வாங்கித் தந்ததின் காட்டமோ முக வாட்டமோ
ஆவி பறக்குதடி தேநீரில்
ஆவி துடிக்குதடி நெஞ்சினில் கண்ணம்மா !
அடுத்த தீபாவளியில்
காஞ்சிப் பட்டுடுத்தி கட்டி அணைப்பேனடி
இது சத்தியமடி என் கனவுத் தேவதையே !
---கவின் சாரலன்