இன்றைய கவிதை கவித்தா சபாபதி
அங்கேயும் ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது என்ற ஆரம்ப
வரிகளும்
அங்கே-
கங்கைகள் பாயுமென்று
பாவங்கள் வந்தன
----என்ற முரண் தொடரும் நீங்கள் எதை சொல்லப் போகிறீர்கள்
என்பதை தீர்க்கமாகக் கோடிட்டுக் காட்டிவிடுகிறது .
ஓர் ஆசிரமத்தின் அவலங்களையும் இழிவுகளையும் வெறும்
உணர்சிச் செய்திகளாக சொல்லாமல் தேர்ந்த உவமைகளால்
சொல்லியிருப்பது தங்களின் உரத்த சிந்தனையையும்
கவிதைத் திறனையும் அடையாளம் காட்டுகிறது .
இறைவனின் குழந்தைகள்
மனத்தவங்கள் புரிய
மரவுரிகள் எழுதி வைத்த
மன்மதக் கதைகளோ
பிரசுரத்துக்கு வந்தன.
----ஆஹா இப்படியெல்லாம் எழுதிட முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறீர்கள் . அதே சமயத்தில்
இப்படியெல்லாம் எழுத வேண்டும் என்ற ஆவலையும்
தூண்டுகிறீர்கள் . யாப்பிற்கு அப்பால் இலக்கியத்தை நிறுவ முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது.
வாழ்த்துக்கள் கவித்துவ சபாபதி
---அன்புடன், கவின் சாரலன்
இது கவித்தா சபாபதியின் "கங்கையைத் தேடும் பாவங்கள் " என்ற கவிதையில் நான் சொன்ன கருத்து.
நீங்களும் படித்துப் பாருங்கள் . நான் சொல்வதின்
நியாயம் புரியும்
----கவின் சாரலன்