மீண்டுமீண்டும்

************************
மீண்டுமீண்டும்!
************************
மீண்டுமீண்டும் குளிக்கின்றோம்; அழுக்குப் போச்சா?
*** மீண்டுமீண்டும் உண்கின்றோம்; பசிதான் போச்சா?
மீண்டுமீண்டும் துயில்கின்றோம்; உறக்கம் போச்சா?
*** மீண்டுமீண்டும் சிரிக்கின்றோம்; துயர்தான் போச்சா?
மீண்டுமீண்டும் பிறக்கவைத்து நமது வாழ்வை
*** வேடிக்கை பார்க்கின்றான் இறைவன்! நாமோ,
மீண்டுமீண்டும் பாவங்கள் புரிந்து நல்லோர்
*** வேடங்கள் போட்டுலகைக் கெடுக்கின் றோமே!
**********************************************************************************
மீண்டுமீண்டும் முயற்சித்தால் வெற்றி கிட்டும்!
*** மீண்டுமீண்டும் பயிற்சித்தால் நிபுணன் ஆவாய்!
மீண்டுமீண்டும் காதலித்தால் வாழ்க்கை என்னாம்?
*** மீண்டுமீண்டும் கடன்வாங்கின் தற்கொ லைதான்!
மீண்டுமீண்டும் மன்னித்தால் அர்த்தம் இல்லை!
*** மீண்டுமீண்டும் ஏமாந்தால் மனிதன் இல்லை!
மீண்டுமீண்டும் யோசிப்பான் புதுமைப் பித்தன்!
*** மீண்டுமீண்டும் யாசிப்பான் பிச்சைக் காரன்!
**********************************************************************************
மீண்டுமீண்டும் எல்லையில் பதற்றம் பாக்.கால்!
*** மீண்டுமீண்டும் சீனாவின் அச்சு றுத்தல்!
மீண்டுமீண்டும் மாவோயிஸ்ட் நக்சல் பாரி!
*** மீண்டுமீண்டும் கொலைகொள்ளை கற்ப ழிப்பு!
மீண்டுமீண்டும் கதவடைப்பு, வன்மு றைகள்!
*** மீண்டுமீண்டும் வெளிநாடு செல்வார் பி.எம்.!
மீண்டுமீண்டும் கொடநாடு செல்வார் சி.எம்.!
*** மீண்டுமீண்டும் சுடுகாடு செல்வார் மக்கள்!
**********************************************************************************
மீண்டுமீண்டும் துட்டைவாங்கி ஓட்டுப் போட்டு
*** மீண்டுமீண்டும் திருடரையே தேர்ந்தெ டுப்போம்!
மீண்டுமீண்டும் வெள்ளம்வந்து கடலுக் கோடும்!
*** மீண்டுமீண்டும் அந்நீரைத் தேக்க மாட்டோம்!
மீண்டுமீண்டும் கடல்தாண்டி மீன்பி டிப்போம்!
*** மீண்டுமீண்டும் இலங்கையிடம் மாட்டிக் கொள்வோம்!
மீண்டுமீண்டும் கடிதம்வரை வார்மு தலவர்!
*** மீண்டுமீண்டும் ... அயா..சாமி...விடுங்கள் ஆளை!
***********************************************************************************

எழுதியவர் : ராஜமாணிக்கம் (12-Nov-15, 8:45 pm)
சேர்த்தது : டோனி கிறிஸ்டோபர் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 51

மேலே