கண்ணீரின் பரிசுகளோடு நான்
![](https://eluthu.com/images/loading.gif)
..."" கண்ணீரின் பரிசுகளோடு நான் ""...
அன்புநிறை இதயத்தை கிழித்து
ஆசைகளை தேடி அறிவிழந்து
இன்பம் இன்பமென்றே இழிவாய்
ஈகைதனை மறந்த உலகத்தில்
கேள்விகளும் கேளிக்கைகளும்,,,
என்னை மறந்தவர்களையும்
நான் எண்ண மறந்ததில்லை
என்னை மறந்துவிடலாம் ஏன்
உன்னையும் மறந்துவிடலாம்
மரணமெனை ருசித்தபின்னே ,,,
எதுவுமிங்கு நிரந்தரமில்லை
நீ நானென்ற போட்டிகளால்
வாழமறந்து வழக்கிடுகிறோம்
வேதனையான வேடிக்கைதான்
நித்தம் வாடிக்கையாகிவிட்டது ,,,
அனுபவமே ஆசானென்றால்
ஆழ்மனத்தின் தாழ் திறந்தே
கற்றதையே சொல்லுகிறேன்
காலம் தந்திட்ட காயங்களாம்
கண்ணீரின் பரிசுகளோடு நான் ....
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..