சுகம் அல்லவா

பனித்துளிப் பட்டு
மலர்கள் மடிந்து போகுமா......
கதிரவன் பட்டு
பசுமை எரிந்து போகுமா....

உந்தன் பார்வை பட்டே
எந்தன் பாரம் குறைகிறது........
உந்தன் கனவுகள் பட்டே
எந்தன் கவலைகள் கரைகிறது........

செடியின் கொடிகளுக்கு
மலர்கள் சுமை என்றாலும் –அதன்
நறுமணம் கொடிகள் நிமிர
வலிமை அளிக்கிறதல்லவா !........

அவ்வாறே.......

உந்தன் பார்வைக்கு
எந்தன் நிழல் சுமையானாலும்.....
எந்தன் சுமைகளுக்கு –உந்தன்
சுட்டெரிக்கும் பார்வை
சுகம் அல்லவா !!......

- தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (14-Nov-15, 1:44 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : sugam allavaa
பார்வை : 77

மேலே