பசிக்காமையில் புசிக்காமை
பணம் இல்லா மனிதன்
பலஹீனமாவது போல்
பசி இல்லா மனிதன்
சுகமில்லாதவன் ஆகிறான்;
வேளா வேளை சாப்பிட்டால்
ஜீரணமாகாது,
வேளா வேளை
வேலை செய்தால் மட்டுமே
ஜீரணமாகும்;
இல்லையேல் இரப்பைகள்
இந்திய ரயில்வே துறைபோல
குறித்த நேரம் தவறியே
குந்தகம் விளைவிக்கும்..
காலை மாலை
குறித்த நேரம் தவறினால்
கண்ட நேரம் வந்து
கதவை தட்டும்
எமர்ஜன்சியாய்..
(சும்மா தமாசுக்கு...)