இயற்கையின் ஒற்றுமை மனிதனிடம் ஏது 555

மனிதா...மனிதா...

இரவினை வெள்ளையடிக்கும் கதிரவன்
கதிரவனை கொள்ளையடிக்கும் இரவு...

ஒவ்வொரு துளியாக விழுந்து
பெருவெள்ளமாக மாறும் மழைத்துளிகள்...

ஓடும் வழிகளில் மூடி மறைக்கும்
பள்ளம் மேடுகளை...

தென்றலாக வந்து
நாணல்களையும்...

சூறாவளியாக வந்து
மரத்தை வளைக்கும் காற்று...

ஒன்றாக கூடி வந்து கரையை
உடைத்துவிடும் அலைகள்...

ஒன்றாக கூடி பறக்கும் சிட்டுக்கள்
அது விண்ணில் ஒரு கருப்பு வானவில்...

ஒவ்வொன்றாக விண்ணில் தோன்றி
அழகினை கூட்டும் விண்மீன்கள்...

தனக்கு கிடைத்த உணவினை
பகிர்ந்துண்ணும் காக்கை...

ஏரிகளில் கூட்டம் கூட்டமாக
வந்துசெல்லும் மீன் குஞ்சுகள்...

இவைகளிடம் கேட்டு தெரிந்து
கொள்ளுங்கள் ஒற்றுமையை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Nov-15, 8:05 pm)
பார்வை : 999

மேலே