இதழ்முத்தம்
இனிப்பு வேண்டும் என
அடம் பிடிக்கும் குழந்தையைப்போல,
ஒருநாள்..
இதழ் முத்தம் வேண்டும் என
அடம் பிடித்தான் அந்த கள்வன்.!
பொய்யான வெட்கத்துடன்,
தடுப்பதாய்
நான் நிகழ்த்திய நாடகம்
சில நிமிடமே நீடிக்க,
இறுதியில் வெற்றி அவனுக்கே...
பலநாள் பசித்திருந்தவனாய்
மிச்சம் இன்றி சுவைத்துவிட்டான்,
என் இதழ் மொத்தத்தையும்...!

