மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் எத்தனை முறை
காதலித்தாலும் அதன் சுகமே வேறு....

ஆம், இது எனக்கு நான்காவது
காதல் பாடம்...

பள்ளி பருவத்தில் ஒன்று
மீசை அரும்பும் போது ஒன்று
கல்லூரி பருவத்தில் ஒன்று
வாழ்கை பக்குவப்பட்ட பின்பு ஒன்று

மீண்டும் மீண்டும் காதலில் தோற்றாலும்
காதலுக்கு என்னவோ என் மனதில் To-Let போர்டு உண்டு....

காதல் தோல்வி தரும் வேதனை வேறுபட்டாலும்
அது தரும் அனுபவம் என்னமோ ஒன்று தான்....

நண்பனின் கைப்பேசி அழைத்தாலும்
என் கைப்பேசியை நாடும் என் உள்ளம் ..

காதலியின் குறுஞ்செய்திக்காக (Message)
விழி மூடாமல் காத்திருக்கும் என் கண்கள்....

அவளின் அழைப்பிற்காக (Call)
ஏங்கிருக்கும் என் கைப்பேசி...

அவள் குரல் கேக்க
காத்திருக்கும் என் காது மடல்கள்....

இப்படி கிறுக்குத்தனமாக கழித்த நிமிடங்கள் எல்லாம்
பொக்கிசமாக என் உள்ளம் என்னும் அறையில்....

எத்தனை முறை தோல்வி கண்டாலும்
மீண்டும் மீண்டும் காதலிப்போம்.....

மீண்டும் மீண்டும் காதலிப்போம்.....
மனித நேயத்துடன் வாழ்வதற்கு....

எழுதியவர் : பிரதீப் ரா (16-Nov-15, 7:54 am)
Tanglish : meendum meendum
பார்வை : 82

மேலே