மீண்டும் மீண்டும் – இரண்டு - - - போட்டிக்கவிதை
மீண்டும் மீண்டும்
====தோன்று கின்ற
========ஒற்றை பிம்பம்
============உந்தன் முகம்!
மீண்டும் மீண்டும்
====வேண்டி நின்று
========கிடைத்த வரம்
============உந்தன் கரம்!
மீண்டும் மீண்டும்
====கொஞ்சிக் கொஞ்சி
========பேசும் கிளியாய்
============உந்தன் மொழி!
மீண்டும் மீண்டும்
====சுவாசம் தந்து
========எனக்காய் துடிக்கும்
============உந்தன் இதயம்!
மீண்டும் மீண்டும்
====மருந்தாய் வந்து
========மனதை ஆற்றும்
============உந்தன் அன்பு!
மீண்டும் மீண்டும்
====கரும்பாய் வந்து
========கலக்கம் போக்கும்
============உந்தன் பிரியம்!
மீண்டும் மீண்டும்
====அன்புக் காக
========ஏங்கிக் கண்ணீர்
============வடிப்ப தேனோ!
மீண்டும் மீண்டும்
====கெஞ்சிக் கெஞ்சி
========கிடக்கும் நானே
============நீயாய் ஆனேன்!