மீண்டும் மீண்டும் - மூன்று -- போட்டிக்கவிதை

எனை மறந்துபோ நீஎன
**********ஆசி வழங்கினாய்...
பேசிய பேச்சையெல்லாம்
**********அழிப்பானால் அழித்தாய்...
சுற்றிய நாட்களை
**********நாடு கடத்தினாய்...
பழகிய மணித்துளிகளை
**********விண்வெளி அனுப்பினாய்...
எனைவிட்டு வெகுதூரம்
**********பறவையாய் பறந்துபோனாய்...
மனதிற்குள் பள்ளம்தோண்டி
**********ஞாபகமாய் மட்டும் அமர்ந்துகொண்டாய்...
உன் சொல்பேச்சு கேட்பது
**********தானே எனக்கழகு...
மறக்கச்சொல்லி என்
**********மனதிடம் மன்றாடினேன்...
பலநூறு விண்ணப்பங்களை
**********பலநாளும் அனுப்பிவைத்தேன்...
ஜெயித்தேனா உனைமறக்கும்
**********மனதின்முயற்சியில் வென்றேனா...!
நான் தோல்விதான் அடைந்தேன்
**********என உனக்குத்தெரியாதா...!
நான் வெல்லவேண்டுமானால்
**********உலகம் விட்டுச்செல்லவேண்டும்...
எனவேதான் காற்றில்கலந்து
**********இன்று உன்னருகே வீசிக்கொண்டுள்ளேன்...
உன் மென்சிலிர்ப்பின் முகவரியாய்
**********மீண்டும் மீண்டும் உன்காதில் பேசிக்கொண்டுள்ளேன்...!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-Nov-15, 8:21 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 397

மேலே