மீண்டும் மீண்டும்
என் வலியின் மருந்தென உன்
வலையில் விழுந்தேன்.
உன் அன்பில் கரைந்து உலகை
மறந்தேன்.
அலைகரை போல இருவரும் இருந்தோம்.
இரவெல்லாம் கனவாய்.,
உன் நினைவே உணவாய்..
புத்தனை போல் நான்
சித்தம் மாறியே..உன்
பித்தனாய் திரிந்தேன்.
உயிர் என்றாய்.
உடல் என்றாய்.
கனவென்றாய்..
கணவனென்றாய்.
தீண்டும் உன் கைவிரலின்
கனையாழியானேன்.
சுற்றும் உன் விழிக்குள் நான்
கட்டுண்டு கிடந்தேன்.
என்ன நினைத்தாயோ இன்றென்னை
தவிர்த்தாய்.
தவித்துப்போனேன் கண்ணிழந்த குருடனாய்.
முற்றிய நம் காதலுக்கு நீ
முற்றுப்புள்ளி வைத்தாய்.
தேடி வரும்போதெல்லாம் முகிலுக்குள் முழுமதியாய்
ஓடி ஒளிந்தாய்.
காயம் இல்லாமல் கடும் வலி கொண்டேன்.
தேயும் நிலவாகி இருள் வாழ்வு கண்டேன்.
உன் விளையாட்டு பொம்மை நானாக..
என் வாழ்நாள் போகுது வீணாக.
எனைவிலக்கிய காரணத்தை விளக்கடி.
மீண்டும் மீண்டும் உனைச்சேருவது என் இலக்கடி..