வின்ஞானம் போட்டிக் கவிதை
என்னைத் தாக்கிச் செல்லும்
இந்த வின்ஞானம்
என்னை மரணிக்க
மறுதலிப்பு செய்கிறது.
மேலை நாட்டு தொடர்வண்டி ஒன்றின்
வேகத்தை ஒப்பிட்டு பார்த்தேன்
இன்னும் சில வருடங்களில்
இந்த - காச்மீரமும் கன்னியாகுமரியும்
உங்களுக்கு
இருவிரல் தொட்ட தூரத்து நேரமே.
நாளை வரும் மனிதனின்
மகள் பிள்ளை படிப்பது ஒரு கிரகம்
மகன் பிள்ளை படிப்பது இன்னோர் கிரகம்
இவர்களைப் பார்க்க
இங்கிருந்து செல்வார் அப்போதைய தாத்தா.
அவரிருப்பதோ பூமிக்கிரகம் .
மரணத்தைக் கொல்லும்
மருந்திவன் கண்டாலும்
மண்ணில் நெருக்கடி கொடுமை என்பதால்
மருந்துக்கே மரணமிடுவான் .
முற்றிலைகள் உதிர்ந்து
புத்திலைகள் துளிர்க்கும்
வித்தியாச வேகத்தில்
புவிஈர்ப்புவிசை மட்டும் மாறாமல்
மணிக்கு முப்பத்தைந்து
கிலோமீட்டர் வேகத்திலே இருக்கும் .
என்னைத் தாக்கிச் செல்லும்
இந்த வின் ஞானம்
என்னை மரணிக்க
மறுதலிப்பு செய்கிறது.
அரைகுறை ஆடை உடுத்தி
அந்த பாதையில் நடந்து வந்தார்கள்
அதற்கு முன்
அதுவும் இல்லாமல் இருந்தார்கள்
சிலர் கம்போடும்
சிலர் கழுதைகள் பூட்டிய வண்டியோடும்
பயணம் தொடர்ந்தது.
இப்போதிவன் நடந்தபோது
அழகிய ஆடையோடும்-
அலைபேசி கையோடும்-
இன்னுமோர் கோடி
இரவுகளுக்குப் பின்னே வருபவன்
இதையும் பார்த்து சிரிப்பான்.
அப்போது
அவனின் பிறந்தநாள் விழா
ஆகாயத்தில்
அங்கவொரு கிரகத்து மைதானத்தில்
அழகாய் நடக்கும் .
பறவைகளின் அழகு கூட்டு வீடுகள்
பழுப்பேறிய நெகிழிக்கு மாறும்போது
யார்கண்டார்கள்
தேனீக்கள் தேனுறிஞ்ச
தேங்குழல்கள்
தேவையின்றி போகலாம்
உண்மையில் -
என்னைத் தாக்கிச் செல்லும்
இந்த வின் ஞானம்
என்னை மரணிக்க
மறுதலிப்பு செய்கிறது.