உரிமைகள் பறிக்கப்படுகிறது

அச்சமில்லை அஞ்சவில்லை....

கெஞ்சி கெஞ்சி மிஞ்சியது இரத்தம் மட்டும் எஞ்சியது....
சத்தம் மொத்தம் அடங்கியது....
சாக்கடைகளின் கைகள் ஓங்கியது....
ஜாதியை சொல்லி ஆர்ப்பாட்டம்....
சங்கத்தை சொல்லி ஆர்ப்பாட்டம்....
தெருவெல்லாம் பொதுக்கூட்டம் மக்கள் வாழ்க்கை திண்டாட்டம்....
உண்டவன் உணவில் தவறென கண்டவன் சொல்ல செம்மறி ஆடுபோல் சில கூட்டம் ஏறி மிதித்து வெறி ஆட்டம்.....
பற்றிக் கொண்டது தீயாட்டம் மக்கள் இரத்ததில் இனவெறியாட்டம்....
சட்டம் பல அறித்தவர்கள்....
திட்டம் பல தெரிந்தவர்கள் அங்கும் இங்கும் கூட்டமிட்டு உயர்த்தவன் தாழ்ந்தவன் பிரித்து வாதிடவே காசுக்கொரு பக்கம் சேர்ந்து பேசும் பொய்யில் மனம் நிறைந்திடவே....
ஊமை போல் நிற்கிறது....
உண்மை எல்லாம் சாகிறது....
கண்டும் காணாமல் போகிறது.... சிலரது உரிமை மட்டும் பறிக்கிறது....
மதுவை எதிர்த்து ஒரு பாட்டு மானம் பறித்ததென ஒரு சாட்டு.... உணர்வுகள் பேசவும் ஒரு கோர்ட்டு ஏன் இந்த அவலம் நிற்பாட்டு....
உனக்கும் உண்டு எனக்கும் உண்டு ஆறாடி குழிதான்.... ஆரம்பம் ஆகட்டும் உன் தொண்டு....





!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (16-Nov-15, 8:45 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
பார்வை : 47

மேலே