மீண்டும் மீண்டும்

"மீண்டும் மீண்டும்"

தாயின் கருவரையில் வாழ,

தந்தையின் தோல் மேலேரி திருவிழா காண,

சகோதிரியிடம் செல்லமாய் சண்டையிட,

பள்ளிக்கு முதல் நாள் போகாமல் ஆழ,

வகுப்பறையில் வாழ்ந்திட,

தோழமையில் தொலைந்து போக,

ஆசிரியரிடம் அடிவாங்க,

முதல் மதிப்பெண் பெற,

சின்னதாய் சிலிர்ப்புற,

அவளின் முகம் காண கலாம் மறந்து காத்திருக்க,

கல்லுரியின் முதல் நாள் வாய்முடி வழி மறக்க,பின் வாய் மூடமல் வாதிட,

தேர்வின் முன் இரவு புத்தகம் மொத்தம் படித்து தேர்வெழுத,

தேர்வில் தோற்று தேம்பி ஆழ,

நண்பனின் அரவனைப்பில் வாழ்ந்திட,

காதலுக்காக கவிதை எழுதிட,

படித்து முடித்து சிறிது காலம் ஊர்சுற்றிட,

வேலை தெடுவதையே வேலையாக செய்திட,

அலுவலகத்தின் முதல் நாள் முகர்ந்திட,

முதல் மாத சம்பளம் கையில் வாங்கிட,

குடும்ப சுழலை புரிந்து கொண்ட நடந்திட,

பெண் பார்த்து திருமண செய்திட..

வாழ்க்கைதுணையிடம் இன்ப துன்பங்களை பகிர்ந்திட,.

துணைவியின் கர்ப காலத்தில் அவள் கை பிடித்து நடந்திட,.

என் உதிரத்தின் உயிரை ஊஞ்சல் ஆட்டிவிட,

குடும்ப தலைவணாய் என்னை அறிந்திட,

செல்ல பிள்ளையை செழிப்புடன் வளர்திட,

வயது முதிர்ந்த காலத்தில் பேரன் பேத்தியுடன் வயதை மறந்து விளையடிட,

இறுதி மூச்சினை இன்பமுடன் சுவாசித்திட,

"மீண்டும் மீண்டும் "

மனிதனாக பிறந்து வாழ்ந்திட ஆசை.

எழுதியவர் : குருசாமி (17-Nov-15, 2:11 am)
சேர்த்தது : குருசாமி பழனி
பார்வை : 68

மேலே