வின் ஞானம்
எழுத்தின் உயர்ச்சிக்கும் பரிணாம வளர்ச்சிக்கும்
வழுத்திடும் வகையில் உள்ள உறவு ஒளிரும்
கழுத்தது சிரசையும் உடலையு மிணைக்கும்
இழுக்கிலா தங்கமென்றது மிளிரும்.
பொல்லாத ஞானத்தால் எல்லாமும் படைத்தவன்
சொல்லாமல் சொல்லிடும் சேதியிது –என்றும்
நில்லாத உலகிதில் சும்மா இருப்பதில் சுகம்
இல்லையெனு நிலையினைக் கூறுவது
ஆணும் பெண்ணும் நீயும் நானும் போல்
மண்ணும் வானும் அதில் காணும் யாவும்
ஒன்றுமே இல்லாமல் ஒருநாளில் வந்ததோ
என்றிங்கே ஒருவன் யோசித்தனன்.
வேதியல் உலகில் மூலக அமைப்புக்கு
சாதி எழுத்துக்கள் நூற்றி மூன்று-என்றும்
ஆதியில் தனிமங்கள் அவையே என்றும்
போதித்தான் மெண்டலீவ் எனும் அறிஞன்.
பெரிய மூலக்கூறு ஒன்றில் இருப்பவை
அரிய எழுத்துக்கள் நானூற்றி அறுபத்தி
எட்டென்னும் உண்மையை உலகமதற்கு
பிட்டும் நிலை நட்டும் வைத்தான்.
அடினின் குவானின் தைமின் சைட்டொசின்
படிநிலை நால்வகை மென் காரங்களே
முடிவிலா மரபதை தலைமுறை தோறும்
வடித்திடும் நல்முத்து வார்த்தைகளாம்.
தலைமுறை ஒன்றின் பண்பு நலன்களை
அலை அலையாக அடுத்த ஒன்றுக்கு
எடுத்து செல்லும் மரபுவழித் தந்திரம்
விடுகதை இல்லை ஜெனடிக் மந்திரம்
எந்தவொரு பொருளும் பனிஉறை நிலைக்கும்
சிந்தாத இருனூற்று எழுபத்து மூன்று பாகைகள்
தாழ்ந்த அதிகுளிர் நிலையினை அடைந்திட
வாழ்பொருள் இயக்கமின்றி முடங்கும்.
தூண்டு விசையாக சுடரொளி எழுத்துக்கள்
மீண்டும் உயிர்த்திட ஐந்தாம் விசை- அது
காந்த விசை நிறை ஈர்ப்பு என்பாரதுவும்
பாந்தமாய் பொருந்திடும் வின் ஞானம்!
வடக்கு தெற்கு காந்த முனைகளின்
இடையில் வைத்திட்ட மின் சுருளில்
மின்கம்பி ஒன்றினைச் சுழல விடுகையில்
மின்சாரம் பாயும் உயிரதன் சாரம்.
விசையது இருந்திட ஆற்றல் வேண்டுமே
பசையது இன்றி பாழ் உயிர் தோன்றுமோ
சாற்றிட ஆற்றலில் ஐவகை உளதே
கூற்றிது உண்மை தேறுதல் இனிமை.
மேலாண்மை அலுவலர் சுழல் இருக்கையில்
கேளாமல் எதுவும் சுற்றுவது ”சுழல் ஆற்றல்”
கொஞ்சம் நீரைப் பருகிய பின்னர் அவர்
நெஞ்சை நிமிர்த்தினால்”அதிர்வு ஆற்றல்”
நீருக்குப் பதிலாகப் பானகம் பருகி அவர்
வீறு கொண்டு நடந்தாலது”சலன ஆற்றல்”
யாருக்கும் தெரியாமல் உயிரிகள் வளர்ந்து
பாருக்குள் தழைத்தல் படைப்பாற்றல்.
ஆற்றலும் விசையும் தேற்றிட நம்மை
மாற்ற வல்லது இறை நம்பிக்கை –அது
ஏற்றவரை ஏற்றி ஏற்காதவரை ஏமாற்றும்
போற்றல் எதிர்பாரா வின் ஞானம்.