உரிமைகள் பறிக்கப்படும்-2
இளைஞனே –நீ
அவளை நேசிப்பது
உண்மை எனில்......
அவள்
உன்னை நேசிக்க
மறுத்தாலும் உன்
வாழ்வுள்ள காலம் வரை
அவளுக்காய் காத்திரு......
மறந்தும்........
உந்தன் கனவில் கூட
அவளை நோக்கி
நீ இல்லையேல்
நான் செத்துவிடுவேன்
என்று கூறி விடாதே.......
ஏனெனில்
அக்கணம் அவள்
உரிமைகள் பறிக்கப்படும்.........
-தஞ்சை குணா