அணைந்த திரியில் எறிந்த பாத்ரூம் - சி எம் ஜேசு

கூட்டான குடும்பத்தின் முதல் மாடி வீட்டுக் கதை
ஒரு காலை நேரம் ,கரண்ட் இல்லாமல் இருண்ட வீடு முழுதும் சிறிய சிறிய ஒளி வெள்ளம்.கும்மிருட்டை டம்மியாக்கி அசைந்தாடிய ஒரு மெழுகு திரியில் சில சல சலப்பு ஏற்ப்பட்டது

திரியை ஏற்றிய தலைவன் மறந்து விட்டான் ,வந்த வேலையைப் பார்க்க வெளியில் விரைந்து விட்டான்
பக்கத்தில் கடைக்கு சென்ற தலைவி வீடு திரும்பினால் ,ஒரு வித வாடை பாத் ரூம் அறைக்குள் இருந்து
வீச ஆரம்பித்தது .சட்டென மூடிய பாத்ரும் கதவை திறந்தாள் .

உடனே தீயைக் கண்டு திகைத்துப் போனால் .கத்தி கூச்சலிட்டு கீழே ஓடிவராமல் அருகில் இருந்த வாளித் தண்ணிரை எடுத்து சட்டென ஊற்றினால் தீ கொஞ்சம் கொஞ்சமாக அணையாமல் பட்டென அணைந்து விட்டது .உடன் முக்கிய வாசல் கதவைத் திறந்து வெளியில் வந்துப் பார்த்தல் வீடு முழுதும் கரும் புகை மண்டலம் அழகிய அறையை பதம் பார்த்திருந்தது .

அந்நேரம் வேலை முடிந்து வீடு வந்த தலைவன் அறையினுள் நுழைய முற்ப்பட்டான் ,அப்போது தான்
அவனுக்கு தான் செய்த தவறு தெரிந்தது .வெளிச்சம் இல்லாத பாத்ரூம் அறையில் மெழுகு விளக்கு வைக்கும் போது பிளாஸ்டிக் பலகையின் மீது வைத்தது எவ்வளவு முட்டாள் தனம் என்று புரிந்தது .

தலைக் குனிந்தான் .பேராபத்து நீக்கிய தலைவியை பாராட்டினான் .உடன் எறிந்த அறையை காண விரைந்தான் ,வியப்பானது சற்றும் தாமதம் செய்து இருந்தால் முக சவரம் செய்யும் காஸ் வெடித்திருக்குமே,

அதன் பக்கமிருந்த காஸ் நிறைக்கப்பட்ட பாத்ரூம் சாதனங்கள் யாவும் வெடித்து .அறைமுழுதும் அழகுபடுத்தி வைத்திருந்த மரசாதனங்கள் மற்றும் பிளாஸ்டிக் கட்ட அமைப்புகள் யாவும் எரிந்து பெரிய சேதம் விளைவித்திருக்கும் பற்றாக்குறைக்கு தீயை அணைத்த தலைவிக்கு எந்த ஆபத்தும் விளைவிக்காமல் அணைந்து போயிருந்த தீயை எண்ணி நன்றி பாராட்டிக்கொண்டான் .

முழுதும் எறிந்த மெழுகு அணையாமல் பிளாஸ்டிக் பலகையைப் பற்றிக்கொண்டு அதன் அருகே இருந்த கண்ணாடி பிளாஸ்டிக் பிரேமையும் தொற்றிக்கொண்டு ,மெழுகாய் தீயோடு கலந்துருகி அணைந்திருந்தது

கரும்புகையாக இருந்த அறையினை உடனடியாக சுத்தம் செய்து பளிச்சென மாற்றி அதன் பின் நிம்மதி அடைந்தனர் தம்பதியர் .விசியம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டனர் வாழ்க இந்த குடும்பத்தின் அன்பு .வளர்க கூட்டுக் குடும்பம்

எழுதியவர் : சி.எம் .ஜேசு (18-Nov-15, 9:24 pm)
பார்வை : 167

மேலே