நீ வந்த பரபரப்பு -முஹம்மத் ஸர்பான்

நீ வந்த பரபரப்பு
------------------
இரைச்சல் நிறைந்த மனிதப்பாதைகள்
தெருவிளக்கைப் போல் அனாதையாகிறது.
தரையில் சிட்டுக்கள் விட்ட காகிதக்கப்பல்
வற்றிச் செழித்த குளத்தில் கரை சேர்கிறது.

கிரகத்தில் எதிரொலித்த எலும்பின் விக்கல்
நீ சிந்திய முத்துக்களால் குணமடைகிறது.
மரப் பொந்தில் ஒழிந்திருக்கும் மைனாக்கள்
சருகுகளை போர்வையாக அணிகிறது.


கூரையில் விழுகின்ற துளிகளின் ராகம்
சப்தஸ்வரங்களுள் எட்டாத அபூர்வ ராகம்
இறை தேடி பறந்த காக்காய் கூட்டம்
குயிலின் கூட்டுக்குள் ஒழியும் ரகசியம்

கவிஞன் வரிகளும் ஏகாந்தம் தேடும்
பெண்ணின் மார்பில் வெண்பூக்கள் படரும்.
ஓவியத்திலுள் அகப்படாத கலையின் அழகு
விட்டுவிட்டுத் தூவும் உன் முகத்தில் தோன்றும்


காதல் சூடும் குளிரில் ஆறும்.
பகலவனும் உன்னால் தாமதிப்பான்
இயற்கையெனும் பெண் குலத்தில்
மழைப்பெண்னே! நீதான் பேரழகி.

குடைபிடிப்பில் நனைந்த நினைவுகள்.
நீ வந்த பரபரப்பு..!நீ வந்த பரபரப்பு!!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (19-Nov-15, 10:35 am)
பார்வை : 117

மேலே