ஆன்மீகம்

கருப்பில் மூடினால்
ஒரு மதமாம்
காவியில் மூடினால்
ஒரு மதமாம்
வெள்ளையில் மூடினால்
மற்றொன்றாம்
வண்ணத்தில் நம்மை
மூடுவது அல்ல
எண்ணத்தில் நம்மையே
திறப்பதுதான் ஆன்மீகம்

எழுதியவர் : sujith (19-Nov-15, 3:44 pm)
Tanglish : anmeegam
பார்வை : 341

மேலே