பாசக்கொலைகாரன்

1978 "சுரேஷ் சுரேஷ் " அம்மாவின் குரல் 8 வயது சுரேஷ் ஓடிச்சென்றான். "என்ன அம்மா?" அப்பா கூப்புடுறார் என்ன எண்டு கேளு" என்றார் அம்மா .அப்பாவிடம் சென்றான் சுரேஷ்
"அப்பா" என்றான் "ஆ சுரேஷ் கடைக்கு பொய் அப்பா சொன்னவர் எண்டு சொல்லு அவங்க தருவாங்க " என்றார். சுரேஷ் ஆர்வமாய் "பரவல்ல சொல்லுங்கப்பா என்ன எண்டு எனக்கு நியாபகம் இருக்கும்" என்றான். "அடேய் சொல்லறத செய்" திட்டி அனுப்பினார் அப்பா. அவனும் அப்பாவிற்க்கு பயந்து அமைதியாக சென்றான். கடைகாரரும் காகிதம் ஒன்றில் சுற்றி குடுத்தனிப்பினார்.

இருந்தும் அவன் ஆர்வம் அதை அறிய ஆசைப்பட்டது. இருந்தும் அப்பாவிற்க்கு பயத்தில் பார்க்காமல் கொடுத்துவிட்டான். அப்பாவும் அதை வாங்கிகொண்டு கழிப்பறை சென்றார். இவனுக்கோ பெரும் குழப்பம். அப்பா வந்ததும் இவன் கழிப்பறை சென்று நோக்கினான் அங்கே சிக்கரட் மீதி கிடப்பதைக் கண்டான். அவனும் வளர்ந்தான் அப்பாவும் சொல்லவதும் இவன் வாங்கிவருவதும் தொடர்ந்தது.

1985, 15ம் வயது முதல் முறை அப்பாவோடு படம் பார்க்க சென்றான் அதில் கதாநாயகனின் நடிப்பைவிட அவன் பிடித்த சிக்கரடின் கவைச்சியே சுரேசை ஈர்த்தது. அன்று முதல் அப்பாவின் சிக்கரட்டுக்களும் காணமல் போக தொடங்கின.

1995, 25ம் வயது இன்று ஒரு மங்கலமான நாள் சுரேசின் காதலி மனைவியானால் நாகரிகம் மாறியது சிக்கரெட் ஒரு நடைமுறை ஆனது சுரேஷ் சுகத்திரமாக தன்பலக்கத்தி வீட்டில் செய்ய ஆரம்பித்தான் வருடம் சென்றது. சுரேஷ் தந்தையும் ஆனான்.

அழகிய மனைவி அழகிய குழந்தை அழகிய குடும்பம் 5 இலக்க சம்பளம் என வாழ்க்கை சென்றது தன் வளர்ச்சிக்கு அதிஷ்டம் அம்மா என்றவன் மனைவி என்றான் இப்போது அதும் மாறி தன் மகன் என்றான். மாலை எப்பது வரும் மகன் எப்போது பார்ப்போம் என்ற எண்ணமே வேலை நேரத்திலும் பாசம் பொங்கியது மலை முழுவதும் மடியில் மகன் இரவு முழுவதும் தன் நெஞ்சில் மகன் என காலங்கள் ஓட்டினான்.

2010, 40ம் வயது மகனின் 15ம் பிறந்தநாள் கொண்டாட்டம் சுரேஷ் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது தான் சிகரெட் ஆரம்பித்த வயது தன் மகனும் பழகி இருப்பானோ என்ற பயம் தோறியது. பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தது அன்று இரவு இரவுச்சாப்பட்டு நேரம். வாந்திச்சத்தம் சுரேசின் மனைவி "சுரேஷ் சுரேஷ் இங்க வாங்க அவசரமா வாங்க" என்ற கதறல். சுரேசும் பதறி ஓடினான்.

சுரேசின் மகன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தான். வாந்தி முழுவதும் எதோ ஒரு சளி போன்ற கட்டியாக இருந்தது. வைத்தியசாலைக்கு சென்றார்கள். வைத்தியர்கள் பல பரிசோதனை செய்தார்கள் முடிவும் வந்தது ஈரலில் புற்றுநோய் என்று. சுரேஷ் கதறினான்.

மகனை ஓடோடி சென்று பார்த்தன் " அப்பா வலிக்குதுப்ப எனக்கு இயலாம இருக்கப்பா எனக்கு மயக்க மருந்து போடா சொல்லுங்கப்பா " என்று கதறினான். வேதனை தானாக முடியாத சுரேஷ் வெளியே ஓடினான் தன் நண்பன் சிகெரெட்டைபிடிக்க ஆரம்பித்தான் மனதுக்கு ஆறுதல் தருவதை உணர்ந்தான்.
உள்ளே சென்றான், அவனது மனைவி அவனைக்கண்டதும் கொலை வெறியுடன் அவன் மேல் சட்டையை பிடித்து அவன் நெஞ்சிலே குத்தினால். அவனுக்கு அவளை ஆறுதல் படுத்த முடியவில்லை இருதியில் அவளை அனைத்து ஆறுதல் படுத்த முற்பட்டான்.

அவளோ "பாசம் பாசம் என்று சொல்லி என் பிள்ளையை கொண்டுடியே என்று அழுதல் அவனுக்கு ஒருநிமிடம் மூச்சி நின்று வந்தது "எ என்ன சொல்ல்றப்பா" என்றான் அவளும் மயங்கிவிட்டாள்.
சுரேஷ் மகனைப்பார்க்க போனான். "அப்ப்ப்பா வேணாம்பா இனி வேணாம்பா ரொம்ப வலிக்குதுப்ப அம்மாவையும் கொண்டுடாதின்கப்பா என்றான் மகன். சுரேஸ் சுவரில் தலையை முட்டி முட்டி அழுதான்.

தான் பெற்ற மகனை தானே கொன்றான்......

இது ஒரு கதையல்ல தினசரி பலவீடுகளில் நடக்கும் சம்பவம்.

எழுதியவர் : என்றும் அன்புடன் ஸ்ரீ (19-Nov-15, 2:36 pm)
சேர்த்தது : அன்புடன் ஸ்ரீ
பார்வை : 172

மேலே