நிலைப்பாய், இதயத் துடிப்பாய்
புன்னகைக்க வழியின்றி
பார்வைக்கு ஒளியின்றி
வாழ்ந்திட வகையற்று
நானிருக்க - என்னில்
யாவுமாய் கிடைத்தவனே,
உன் கைபிடித்திடும்
பேராசை எல்லாம் எனக்கில்லை,..
உன்னை நெஞ்சில் சுமந்திட - நீ
அளித்திட்ட அங்கீகாரம் போதும்,..
ஆயுளின் அந்திமம் வரை
அடைகாப்பேன் - உன்னை
உயிரினில் விதைத்துவைத்தே!
என்னவனென்று உன்னை சொல்லும்
உரிமை எனக்கில்லை,
உன் அருகே வாழ்த்திடும் நாட்கள்
ஒருபோதும் சொந்தமாவதில்லை,
அறிவேன், உண்மை அனைத்தும் நான்..
ஆயினும், அறியேன் உ(ன்)னை
மறந்து வாழ வழிகள் எதுவும் நான் ..!
உன்னை மறக்க சொல்லி,
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திட
வரம் தந்தாலும் - வேண்டாம்
எனக்கு உன் நினைவின்றி
ஒரு நாழிகையேனும்..!
என் வாழ்வையே இன்று
சோலையாய் மாற்றியவனே,
வாழும் வரையிலும் நிலைப்பாய்
நீ என் இதயத் துடிப்பாய்!