என்னவனுக்கு பிறந்தநாள்
என் உயிரின் உயிரானவனுக்கு பிறந்தநாள்...
என் உயிரினும் இனியவனுக்கு பிறந்தநாள்...
என் புன்னகைகளின் புகலிடத்துக்கு பிறந்தநாள்...
என் சந்தோசங்களின் சந்நிதானத்துக்கு பிறந்தநாள்...
என் இரவுகளின் கனவுகளுக்கு பிறந்தநாள்...
என் பகல்களின் நினைவுகளுக்கு பிறந்தநாள்...
என் ஏக்கங்களின் பிறப்பிடத்துக்கு பிறந்தநாள்...
என் ஆழ் மனதின் ஆசைகளுக்கு பிறந்தநாள்...
என் சுவாசத்தின் மூச்சுக் காற்றுக்கு பிறந்தநாள்...
என் இதயத்தின் இருப்பிடத்துக்கு பிறந்தநாள்...
நான் நானாக வாழ வரம் தந்தவனுக்கு பிறந்தநாள்..!
இரண்டு வரி வடித்து - உன்னை
வாழ்த்திட என் இதயம்
இடமளிக்கவில்லை அன்பே...
வார்த்தைகள் தேடி தோற்றுப்போய்விட்டேன்!
உன் மீதான அன்புக்கு முன்னே,
அத்தனையும் அற்பமாய்...
உன்னை வாழ்த்திட
வரிகள் மறந்த நிலையில்,
என் தாய்மொழி கூட உமையாகி!..
என்றாலும் உனதான நாளிலே
உனக்காய் இவள் பிரார்த்தனை..,
எவரும் தொடாத உயரங்கள் நீ தொட,
எவரையும் அணுகாத சந்தோசங்கள் உன்னை சேர,
உன் புன்னகை முகம் என்றுமே மலர்ந்திருக்க,
நீ நாடியதெல்லாம் இறைவன் அருள்கொண்டு அடைய,
உயிர் பூஜைகள் ஏராளம் செய்தே,
உயில் எழுதுவேன் எந்தன் உயிரை..!
நலமாய் வாழ வாழ்த்துக்கள்!
நான் வாழும் வரை
எனக்குள் வாழ்ந்துகொண்டிருப்பாய்!