ஹைக்கூ சென்ரியு கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

அசைவத்தை வென்றது
சைவ விலையேற்றம்
துவரம் பருப்பு !

வட்டிக்கு வாங்கி
ஒரு நாள் மகிழ்ச்சி
தீபாவளி !

சாதி மதம் மறந்திடுக
சாதிக்க நினைத்திடுக
சமுதாயம் சிறக்கும் !

சாரல்
மழை நின்றபின்னும்
மரத்திலிருந்து !

விவேகமன்று
அதிக வேகம்
விபத்து !

வாழ்நாள் நீட்டிப்பு
கவனம்
சாலையில் !

வேண்டாம் வெறி
விலங்காக மாறாதே
வாழ்க மனிதனாக !

மாண்ட உயிர்
மீண்டும் வருவதில்லை
வேண்டாம் கொலை !

கற்பிக்கப்பட்ட
கற்பனை
பேய் பிசாசு !

நாடு கடத்துவோம்
பேய்ப்பட
இயக்குனர்களை !

கடமை
பண்படுத்துதல்
படைப்பாளிக்கு !

நீதி நெறி
கற்பிப்பவரே
எழுத்தாளர் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (19-Nov-15, 10:22 pm)
பார்வை : 115

மேலே