தூது ஒன்று சொல்லிவிட்டேன்

தூது ஒன்று சொல்லிவிட்டேன் புரியவில்லை
உன் பின்னாலேயே வந்து பார்த்தேன் விடையுமில்லை - உனக்கு
தூது ஒன்று சொல்லிவிட்டேன் புரியவில்லை
உன் பின்னாலேயே வந்து பார்த்தேன் விடையுமில்லை
பார்வையாலே கொல்லுகிறாய்
பார்த்துவிட்டால் வெட்டுகிறாய்
கண்ணே..உன் பொன் முகத்தை பார்க்கத்தானே
ஊரில் உள்ள சந்து பொந்து
அனைத்தும் அறிந்து கொண்டேனே...

மழையினில் நனைவாயோ - என்றெண்ணி
குடையுடன் வந்தேனே...
குடையுடன் நனைந்தேதான் - வந்தேனே
மழைதனை மறந்தேனே
எந்நாளும் இல்லாத பொன்னாளாய்
கண்ணாடி முன்னாடி நின்னேனடி...
நீ திரும்பிப்பார்க்கும் வேளையிலே என் கண்கள் இமை மூடிக்கொள்ள
இமை திறந்துகொள்ளும் வேளையிலே நீ திரும்பி கொள்ளும் மாயமென்ன...
புரளி பேசும் வாயிக்கெல்லாம்
தீனியாக போன பின்னும்
உன்னை தொடர்ந்து வந்தேனே....

உன்னை தேடி வரும் வேளையில் - கண்ணாலே
என்னைத்தேடும் இளங்கிளிகள்
தன்னைப்பார்க்கவில்லையென்று - என்னைப்போல்
அவைகளும் வாடிப்போகுது..
காவிரியும் கங்கையும் சங்கமம் ஆகுமடி
நீ என்னை ஏற்ப்பதற்க்குள்...
போதுமடா இந்த வேலை
பொழப்ப பாருன்னு மூளை சொல்ல
இதயம் அதை கேட்கவில்லை
முயற்சியையும் விடவுமில்லை
நீயும் நானும் சேர்வோம் என்ற
கனவிலேதான் வாழ்க்கை இன்று நகர்ந்து கொண்டே இருக்கு....

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (20-Nov-15, 2:49 pm)
பார்வை : 115

மேலே