நிழலின் அருமை நீ
நிழலின் அருமை நீ
விடுமுறை யானால் போதும் அம்மா வீட்டில் தான் உனக்கு சுகவாசம்
நீயும் குழந்தைகளும் இல்லா வீடு வெறிச்சோடி சந்தோசமின்றி
சோகமாய்க் கிடக்கிறது.
காபி போடவேண்டுமென்றால் சக்கரை எது உப்பு எது எனத் தெரியாமல் கண்டுபிடிப்பதற்குள் பால் பொங்கி வழிந்து அணைந்து விடுகிறது அடுப்பு.
வீட்டில் உள்ள குப்பைகள் சுத்தமாக்க வேண்டுமென்றால் விலக்கமாற்றிலிருந்து ஈர்குச்சிகள் உருவ நானும் காலொடுங்கி கையொடிந்து உருவின்றி சோர்ந்து போகிறேன்.
சமைக்க பருப்பு அரிசி எடுத்தால் அளவு தெரியாமல் தண்ணீர் இன்றி கருகிப் போகிறது குக்கர் விசிலின்றி.
துணி துவைக்கத் தெரியாமல் சுருங்கி அழுக்கு சொக்காயில் அலுவலக வாசம்தான் .
சில நேரம் கொல்லைபுறக் கதவைத் தாழிட மறந்தவனாய் அலுவலகம் செல்கிறேன்.
பல நேரம் குளிக்கும் போது
மோட்டார் போட மறந்தும் தண்ணீரின்றி பாதி குளியல்தான்.
நிழலின் அருமை நீதான் என்று
உன்னை குறை கூறும்போது எனக்கு புரியவில்லை.
இருந்தும் நான் தனிமையில் தவித்த போதும் உன்னிடம் சிலவற்றை மறைத்து விடுகிறேன்.
இன்னும் நீ என்னிடம் சீக்கிரமே வருகிறேன் என்ற போதும்
நான் நன்றாக இருக்கிறேன் சந்தோசமாய் இருந்துவிட்டு வா என்று பொய் சொல்லி வாடித்தான் போகிறேன்.