அந்த நாள்
ஒரே ஒரு மழை..
பேய்த் தாண்டவம் ஆடியதில்..
சுருண்டது சென்னை..
மறைந்தன பேதங்கள்..
எவன் படகு ஓட்டினான் ..
எவன் காப்பாற்றினான்..
அவன் எந்த சாதி..
இவன் எந்த மதம்..
அவன் ஆத்திகனா..
இவன் நாத்திகனா..
அவன் கொடுத்த உணவு தீட்டா..
என்னை இவன் தொட்டால் தீட்டா..
எவனைப் பற்றியும் எவருக்கும் கவலையில்லை..
காப்பாற்றியவ்னுக்கும் யாரை காக்க வேண்டுமென்ற
பேதமில்லை..
சபாஷ்டா..வருணா..
நீ..உனது சகா அக்கினி...வாயு..
எங்கள் கண்டுபிடிப்புகளான
அணு ஆயுதம் எல்லாம் சேர்ந்து
ஒன்றாக வந்து இந்த உலகத்தின்
மூலை முடுக்குகளில் எல்லாம் புகுந்து
ஒரு கலக்கு கலக்குங்க..போதும்..
பிறகு..
எல்லோரும் ஓரினம் ..
எல்லாம் சமத்துவம் ..
ஆகிவிடக் கூடும் ..
எல்லாம் ஒரு யூகம் !