நலம் விரும்பிகள்
குடிகாரனைத் திருத்த
----மதுக் கடையில் நுழைந்தான்
மாலையில் குடிகாரனுடன் போதையில் நடந்தான் !
வேசிக்கு நல்வழி காட்டிட
----வேசியிடம் சென்றவன்
வேசிகள் விடுதிக்கு வாடிக்கையாளன் ஆனான் !
தன் ஒழுக்கம் தன் நிலை தன் கோட்பாட்டில்
உறுதி இல்லாதவன் ஊருக்கு உபதேசம் செய்வானேன் ?
----கவின் சாரலன்