காவியம் காப்பியமாகும்

எல்லாமே விதியென்று புலம்பாமல்
இயற்கையின் நியதியென்று நினைத்து
துன்பத்தை இன்பமாக்கி என்றும் சிரிக்கப்
பழகு சீராகும் அகத்தோடு வாழ்வும் ...

பேராசை கொள்ளாமல் வாழ் பிறந்துகொண்டே
இருப்பாய் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் !
பெருமையைத்தேடி சிறுமையிடம் சிறகொடியாதே
புகழைத் தேடி வாழ்வைத் தொலைக்காதே ..

உனக்கான பெருமையும் புகழும் நீ ஜனிக்கும்போது
பிறந்துவிட்டது அதை தேடுவதை விடுத்து
தக்கவைக்க பாடுபாடு மனிதனாய் வாழ்ந்து ....

நல்லதும் கெட்டதும் செயலில் இல்லை
எண்ணங்களில்தான் இருக்கிறது .
நிறையை மட்டும் பார்க்கப் பழகு
குறை என்பது மாயையாக தோன்றும் ...

எழுதுவதும் பேசுவதும் மட்டுமே வாழ்வின்
இலக்கணமாகது உணர்வலைகளை
உண்மையாக்குங்கள் உயர்வாக்குங்கள்
அப்போதே முழுமைபெறும் உண்மை இலக்கியம் ...

இரும்பைத் துளைக்கும் எண்ணச்செறிவும்
கருமையை போக்கும் வெண்மை உணர்வும்
உனக்குள் இருந்தால் கவிதை காவியமாகும்
காவியம் காப்பியமாகும் ...!

எழுதியவர் : ப்ரியாராம் (20-Nov-15, 3:35 pm)
பார்வை : 74

மேலே