மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும்...!

மீண்டும் மீண்டும்...
கரை..!
நிராகரித்தாலும்
தேடலில்
அலையின் முயற்சி
மீண்டும் மீண்டும்.

மீண்டும் மீண்டும்...
நிலவு..!
தேய்பிறையானாலும்...
பௌர்ணமியாய்
மிளிர...
வளர்பிறை நோக்கியப்
பயணம் ...
மீண்டும் மீண்டும்.

மீண்டும் மீண்டும்...
வாழையை..!
விஷேசங்களுக்காய்
வெட்டி எறிந்தாலும்..
துளிர்கள் மட்டும்
அங்கேயே...
வாழையடி வாழையாக
வளரும்...
மீண்டும் மீண்டும்.

மீண்டும் மீண்டும்...
பறவைகள்...!
கூடுகள் அமைக்கும்,
தன்-
இருப்பிடம் பெயர்ந்து
பிறப்பிடம் போந்து
மீண்டு வாழ....
வலசைபோய் -
கூடுகள் அமைக்கும்
மீண்டும் மீண்டும்.

எழுதியவர் : இராக. உதயசூரியன். (20-Nov-15, 9:52 pm)
Tanglish : meendum meendum
பார்வை : 78

மேலே