ஆசை ~ அர்ஷத்

இயலாமை இடிக்கும் போது
=தளராமல் இருக்க ஆசை
தூவானம் தூறும் போது
=திளைத்தாட கொஞ்சம் ஆசை
கள்ள மில்லா உள்ளந்தனை
=கண்டு கொள்ள ஆசை
கள்வனின் களவு எண்ணம்
=களவு போக ஆசை
ஆளான பின்னாலும் தாய்
=மடியில் உறங்க ஆசை
கருவான நிலவின் ஒளியை
=என்னறையில் அடைக்க ஆசை
மூடிகிடக்கும் ஞானத்தை கொஞ்சம்
= திறந்து பார்க்க ஆசை
இடைவெளி குறைவாக இருப்பினும்
=நாகரீகம் காக்க ஆசை
ஆசை அது பலவிதம்
=ஒவ்வொன்றும் ஒரு ரகம்
ஆசை பட்ட அனைத்துமே
=நடந்திட கொஞ்சம் ஆசை

எழுதியவர் : அர்ஷத் (21-Nov-15, 3:24 pm)
பார்வை : 189

மேலே