மழையோடு நனைந்து

..."" மழையோடு நனைந்து ""...

மேகம் சிந்தும் மழையே
உந்தன்மீதே என் மோகம்
விண்ணைவிட்டு வந்து நீ
மண்ணைத்தொட வரும்
வாசம் எங்கள் பாசத்தை
பறைசாற்றும் சுகந்தம்,,,

கள்ளமிலா பிள்ளைபோல
காகித கப்பல்கள் செய்து
ஆனந்தமே குதித்து மகிழ்ந்து
சிறைபிடித்த கவலை மறந்து
உன்னில் நனைந்து உள்ளம்
குளிர்ந்து உயிர் சிலிர்த்தேன் ,,,

இந்த சித்திரை திங்களின்
சுள்ளென மேனி தகிக்கும்
சுட்டெரிக்கும் வெயிலின்
சூட்டை கொஞ்சம் தணிக்க
வானம் பார்த்து ஏங்கிடும்
உயிரினத்தின் உற்சாகம்,,,

மேகங்கள் சுமந்துவரும்
அழகிய தண்ணீர் பந்தல்
வனங்கள் செழிக்கவும்
பயிர்கள் கொழிக்கவும்
தாகமதனை தீர்க்கவும்
இறைவன் தந்த வரமே,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (21-Nov-15, 2:26 pm)
பார்வை : 350

மேலே