எல்லாமே வியாபாரமதான்------சக்கரைவாசன்

எல்லாமே வியாபாரம் தான்
******************************************************
காலைநேர வியாபாரம் குழம்பியும் தேநீரும்
மாலை வர வியாபாரம் கோப்பையில் மது நீராம்
பால் அது வியாபாரம் ஆக முப்பாலும் வியாபாரம் -- முத்து
மாலையும் வியாபாரம் மண மாலையும் வியாபாரம் !

பூச்செடியதன் தியாகம் பூகட்டி வியாபாரம்
பூச்சட்டி உற்ற பூவோ ஏகத்தில் வியாபாரம்
தச்சனின் தனித்திறமை பர்னிச்சராய் வியாபாரம்
பசச்சனின் முகங்காட்டி திரையுலக வியாபாரம் !

மச்சமும் வியாபாரம் கடல்மச்சமும் வியாபாரம்
கச்சையும் வியாபாரம் உடல் இச்சைக்கும் வியாபாரம்
இச்சையின் வியாபாரம் துச்சமாய் அரங்கேற
சச்சரவே வியாபாரம் உச்சவரம் பின்றியே !

பி(ஸ்)த்தாவும் வியாபாரம் சபரிசா(ஸ் )த்தாவும் வியாபாரம்
வாத்து வித்து வியாபாரம் வா(ஸ் )த்து வைத்தும் வியாபாரம்
அத்தியும் வியாபாரம் காடிட்ட அ(ஸ்)த்தியும் வியாபாரம்
சக்தியுற வியாபாரம் சிவசக்தியே வியாபாரம் !

அட்சய திதியனில் தங்க நகை வியாபாரம்
பட்சிகள் பறக்கவிட்டு கிராமத்து வியாபாரம்
கட்சிகளின் வியாபாரம் கச்சத் தீவே அதில் மோகம்
சாட்சிகளே வியாபாரம் நீதிமன்றப் பாதையிலே !

நண்டும் வியாபாரம் செயற்கைச் சிண்டும் வியாபாரம்
மண்டிக்குச் சென்றிடவே முந்திடும் வியாபாரம்
குண்டும் வியாபாரம் குழியும் வியாபாரம்
கண்டுகொள்ள இயலாது அணுகுண்டும் வியாபாரம் !

கன்றும் வியாபாரம் மலைக்குன்றும் வியாபாரம்
நன்று எனச்சொல்லி பாழ் இறைச்சி வியாபாரம்
நின்றிட்ட வியாபாரம் தொடர்ந்திட வியாபாரம் -- என
ஒன்றிடும் வியாபாரம் என்றும் என்றென்றும் !!
********************

எழுதியவர் : சக்கரைவாசன் (21-Nov-15, 5:21 pm)
பார்வை : 77

மேலே