மறுதலிப்பின் வலி

இது
இருபத்துரெண்டாவது முறை

இரவல் சேலை--
அடகு போன நகையின்
ஒரு நாள் உரிமை

உள்ளூர்
கல்லூரி பெண்களின்
கைங்காரியத்தில்
முகப்பூச்சும்
பிளாஸ்டிக் வளையல்களுமாய்
முகமறைத்து
நானிருக்க

அடுத்த வீட்டு
பொடிசுகளின்
ஆரவாரத்திடையே
உறவு சூழ
நீ வந்து போகிறாய்

கடிதத்தில் பதிலென
நகர்ந்த பின்னும்
இன்னும் சில நாட்களுக்கு
கனவுகள் இனிக்கும்

எழுதியவர் : (21-Nov-15, 2:33 pm)
பார்வை : 61

மேலே