மகிழ்ச்சி-வேதனை
முளை விட்ட செடிகள்
பூத்து காய்த்து செழிக்க
எங்கும் செல்வம் பெருக
மழையின் வருகை மகிழ்ச்சி விவசாயி-க்கு
பெய்த மழையால்
அன்றைய தினக் கூலி கிடைக்காமல்
குழந்தையின் வயிற்றுப் பசி தீர்க்க
முடியாத வேதனை தாய்க்கு...
மழைக்கால வருகையாக
எங்கும் தீராத காய்ச்சல்
உறவினருக்கு வருத்தம்...
வாசல் கொள்ளாத நோயாளிகளின்
கூட்டம் கண்டு
மருத்துவமனையின் மருத்துவருக்கு
மழைக்காலம் மகிழ்ச்சி....
ஒருவரின் துன்பத்தில்தான்
அடுத்தவரின் சந்தோஷம்
இறைவன் படைப்பின் உள்ளர்த்தம்தான் என்ன??....