எம் குல தெய்வங்கள்

வாருங்கள் உறவுகளே
மலர் தூவி ஈகை சுடரேற்ற வாருங்கள்
உத்தமர்களை கவி பாடி
கண்ணீர் செறிய வாருங்கள்
தனித்திரு நாடு மலர
தங்கள் உடலை மெழுகுவர்த்தியாய்
உருக்கி ஆகுதியானவர்கள்
இனத்தின் அழுகுரல்
அடங்கிப்போக அலையாய்
ஓயாது அடித்து
வீர மரணம் எய்தவர்கள்
உங்கள் முன்னின்று
வெட்கித்தலை குனிகின்றோம்
நீங்கள் கேட்டு களமாடிய
தமிழிழ கனவு காலம்
தாண்டி போவதால்

உங்களை நினைந்துருகி
நிற்கின்றோம்
உங்கள் கனவுகள்
இனிது பெற களமாடுவோம்

நீங்கள் உறங்கிய கல்லறைகள்
உருத்தெரியாமல் போனாலும்
உணர்வுத் தமிழர்களின்
நெஞ்சமதில் அழிந்திடாமல் வாழ்வீர்கள்
பொறாமை பதவி
முற்றும் திறந்தவர்கள்
ஈழத்திரு நாடமைய
வலு சேர்த்தீர்கள்
இன் நன் நாளில்
உங்களை புகழ்ந்துரைக்க
அகராதி எட்டவில்லை
நீங்கள் விடுதலை காண
வீற்றிருந்த தளம் சென்று
பெற்றவள் கட்டித்தழுவ
ஆலயம் அங்கில்லை
மழை முகிலே
மகத்தானவர்கள்
புதைந்த இடத்தில்
மழை நீரால் நனைத்துவிடு
ஈழக் குயிலே
மாவீரர்களுக்காக
பல கானம்
இசைத்துவிடு
தோகை மயிலினமே
உன் தோகையால்
வீரர்கள் பாதம் தடவி விடு
இயற்கையே இவர்களை வாழ்த்தி விடு
எம் இனிய உறவுகளே
இன் திரு நாளில்
தீபங்கள் ஏற்றி வழிபடுங்கள்
கார்த்திகை நாயகர்களை...!!!

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (23-Nov-15, 1:46 pm)
Tanglish : yem kula theivangal
பார்வை : 312

மேலே