தனிமை

முற்றுப்புள்ளி தேடிச்செல்லும்
என் கவிதை வரிகள் நீ...

அசைவுகளில் அர்த்தங்கள் தந்து
இதயத்தில் மொழி பதித்தவள் நீ..

பூவாக என் முன் மலர்ந்து
என்னை வண்டாக மாற்றியவள் நீ..

விழிகளால் சிறை வைத்து
மௌனங்களால் வதை செய்து வருபவள் நீ..

இன்று எல்லாமாக நீ இருக்க
என்னை சூனியமாக மாற்றிச் செல்பவள் நீ..

வெதுப்பக விறகாக மாறி
சாம்பல் தூசி போலாகி
இன்று முகவரியற்று நிற்கிறேன்
நீ எனக்கென்று தந்த தனிமையின் தவிப்பால்...

எழுதியவர் : பர்ஷான் (23-Nov-15, 5:22 pm)
Tanglish : thanimai
பார்வை : 552

மேலே