உரிமைகள் பறிக்கப்படும்

உன்
உரிமைகள் பறிக்கப்படும்.....
உனக்கென்ன என்று
உதாசீனம் செய்யாமல் போனால்...!
உன்
உரிமைகள் பறிக்கப்படும்.....
உண்மையை
உரக்க கூறினால்......!!
உன்
உரிமைகள் பறிக்கப்படும்.....
உரிமைகளை,
உரிமையுடன் கோரினால்....!!!
உன்
உரிமைகள் பறிக்கப்படும்.....
"நிர்வாணமாய் உள்ள
மனிதர்களுக்கு மத்தியில்
கோவணம் கட்டினால்"......